ஜெனிவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத்தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய சிங்கள அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பிப்ரவரி 27-ஆம் தேதி கூட இருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு, இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.
2009-இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு,
இப்பொழுது ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்றார்.
|